ஏகாந்த தனிமைக்கு
ஊட்டி கொடைகானல்தான்
தேவை என்றில்லை.
அதைவிட தனிமை
இங்கே கிடைக்கும்.
சுமைகளை இறக்கி வைக்க
மட்டுமல்ல ..
சிலசமயம் கவிதைகள்
பிரசவமாகும் இடமும் இதுதான்.
எவரும் பார்ப்பார்
என்ற கவலைகள் ஏதுமின்றி
முகமூடிகளுடன்
மனமூடிகளையும் கழட்டி வைத்து
மனத்தடைகள் அற்று
நாம் நாமாக உணரும்
ஓரிடம் இது.
உண்மைகளின் காட்சி மட்டுமல்ல
பொய்மைகளின் தரிசனமும்
சிலசமயம்
நமது மீட்டுருவாக்கத்திற்கு
காரணமாய் அமைகிறது.
அப்பேற்பட்ட தரிசனங்கள்
உடன் இருப்பவர் இருக்கையில்
எப்படி கிட்டும். ?
தேவை என்றில்லை.
அதைவிட தனிமை
இங்கே கிடைக்கும்.
சுமைகளை இறக்கி வைக்க
மட்டுமல்ல ..
சிலசமயம் கவிதைகள்
பிரசவமாகும் இடமும் இதுதான்.
எவரும் பார்ப்பார்
என்ற கவலைகள் ஏதுமின்றி
முகமூடிகளுடன்
மனமூடிகளையும் கழட்டி வைத்து
மனத்தடைகள் அற்று
நாம் நாமாக உணரும்
ஓரிடம் இது.
உண்மைகளின் காட்சி மட்டுமல்ல
பொய்மைகளின் தரிசனமும்
சிலசமயம்
நமது மீட்டுருவாக்கத்திற்கு
காரணமாய் அமைகிறது.
அப்பேற்பட்ட தரிசனங்கள்
உடன் இருப்பவர் இருக்கையில்
எப்படி கிட்டும். ?
நம்மை நாம் அறிய
இதுவும் ஒரு இடம்
என்பதில்
உங்களுக்கு எதுவும் தயக்கமா என்ன ?
இதுவும் ஒரு இடம்
என்பதில்
உங்களுக்கு எதுவும் தயக்கமா என்ன ?
No comments:
Post a Comment