நண்பரே !
அவசரப்பட்டிருக்க வேண்டாம்
எனக்கு மொத்தமாய் எத்தனை முகங்கள் என்று
நானே தேடித்தெளியாத நிலையில்
இரண்டு வேஷம் என்று சொல்லி
அவசரப்பட்டிருக்க வேண்டாம்
ஈராயிரம் வேஷங்கள் கட்டி
உறவு கெடுக்கும் மனங்களுக்கு மத்தியில்
இரண்டு வேஷம் என்பது ஆறுதல் தான் எமக்கு.
இரண்டு முகமூடிகள் சுமந்தென்ன?
வியர்வை பிசுக்கும்முள்தாடி எரிச்சலுமென
சுயபாதிப்பு தாண்டி
யாரையும் காயப்படுத்தியதில்லை
எனது முகமூடிகள்.
யோசித்து பார்த்தால்
மன மூடியை விட அசிங்கமாகவும் அருவருப்பாகவும்
இல்லவே இல்லை இந்த முகமூடிகள்.
ஆன்மாவுக்கு வேஷங்கட்டிக்கொள்வதைவிட
அநீதமாய் தெரியவில்லை
இந்த முகவேஷம்.
வயிற்றுப்பாட்டிற்கும்
அதிகார பசிக்கும்,
பரஸ்பர வெறுப்பிற்க்கும்,
மனமுரண்டிற்க்கும்
எனக்கு தெரிந்து என் வேஷங்கள்
பயன்பட்டதேயில்லை.
என் புரிதல்படி
ஆமாம் சாமிகள் தான் அம்மண சாமிகள்.
அதிகம் பேசாதவர்கள் ஆரோக்கியசாமிகள்.
நிதர்சனங்கள் தாண்டி
நீங்கள் வருணிப்பதுதான் உலகமென்றால்
குருடனாகவே இருந்து விட்டு போகிறேன் நான்.
Friday, 21 November 2008
Wednesday, 19 March 2008
முஸ்லிம் பெண்களுக்கான மேற்கல்வி சிக்கல்கள்
பரங்கிப்பேட்டையில் மிகச்சிலகாலம் முன்பு வரை முஸ்லிம் பெண்களுக்கான மேற்கல்வி என்பது கிட்டதட்ட சாத்தியமற்றதாக இருந்தது. மிளகுரசத்திலும் கார்காவிலும் நீர்த்தும், சுருங்கியும் போயிருந்த அவர்களது திறமைகள் அவர்களது சந்ததியினருக்கும் சமுதாயத்திற்கும் பயனளிக்க முடியாமல் இருந்த நிலை கடந்த சில வருடங்களாக மாறி வருகிறது. பல கோடீஸ்வரர்கள் இந்த ஊரில் இருந்தும் பெண்களின் மேற்படிப்பிற்க்காக ஒரு கல்லூரி கூட கட்டமுடியாத கேவலமான நிலை நீடித்ததால் +2வில் நன்மதிப்பெடுத்த மாணவிகள் கடலூர், சிதம்பரம் சென்று படிக்க தலைப்பட்டனர். இந்த தேடலில் நமது சகோதரிகள் எதிர்கொள்ளும் சங்கடங்கள உற்றுநோக்கினால் மிகத்தீவிரமானவை என்று புரியும். ...குறிப்பாக கடலூர் செயின்டஜோசப் கல்லூரி (இது ஒரு பாலர் கல்லூரி காலை ஆண்களுக்கு மதியம் பெண்களுக்கு 1.30 மணி முதல் 5.30 மணி வரை) யில் சென்று படிக்கும் சகோதரிகளின் நிலையினை சற்று பார்ப்போம்.
காலை 11.30 மணிக்கு என்.டி. பஸ்ஸில் அவர்கள் செல்கிறார்கள். அதில் இரண்டு பஸ்ஸிற்கான கூட்டம் எப்போதும் இருக்கும். அந்த நெரிசலில் அவர்கள் மிக மிக கஷ்டமான நிலையில் சொல்லவே முடியாத பல விதமான சங்கடங்கள எதிர்கொண்டு பயணிப்பதுதான் மிகப்பெரிய வேதனை. சிலபோது படியில் கூட பயணிக்கிறார்கள். என்.டி. அந்த குறிப்பிட்ட சிங்கிளில் பெண்கள் குறைவுதான். சில நேரங்களில் இவர்கள் மட்டும் தான் பெண்களாக இருப்பார்கள். கண்ணியம் வழங்கப்பட்ட நமது சகோதரிகள் கல்வி பெறவேண்டி காணச்சகியாத முறையில் யார் யாருக்கு மத்தியிலேயோ இடி, உரசல்கள தாங்கி, நசுங்கி போய் பிரயானிப்பதை உணர்வுள்ள எந்த முஃமின் கண்டாலும் கண்ணில் கண்ணீரையல்ல ரத்தத்தைதான் வரவழைக்கும்.
கல்லூரியிலிருந்து திரும்பி வரும்போது துர்கா பஸ்ஸில் (7 மணிக்கு அங்கு, 8 மணிக்கு இங்கு) 6.30 மணிக்கே வந்து ஜன்னலோரம் இருக்கைபிடித்து அமர்ந்து விடுவதால் இடிமன்னர்களிடமிருந்து தப்பித்தாலும், இங்கே வேறு மாதிரியான கொடுமைகள். துர்கா என்பது வழிபோக்கர்களின் பஸ்தான் எப்போதும். வழி ஊர்களில் இறங்கிசெல்லும் வேலைபார்க்கும் பெண்களும், அவர்கள சார்ந்து அலையும் விடலை/விபரீத ஆண்களுமே அதில் அதிகம் பிரயாணிக்கிறார்கள். பெரும்பாலும் தற்குறியாக, விசிலடிச்சான்குஞ்சுகளாக பொழுதுபோக்க திரியும் இவர்களால் என்ன வகையான பிரச்சனை எப்போது ஏற்படும் என்று சொல்ல இயலாது.
இவர்களைவிட பெரிய ஆபத்து அதில் முழுநேரம் ஒலிக்கும் விரகதாப/ காதல்ரசம் சொட்டும் சோலோ / டூயட் பாடல்கள். வீடுகளிலும் அதைத்தானே கேட்பார்கள் என்று சிலர் சொன்னாலும், அறியாமை கோலோச்சும் புறச்சூழல் ஒன்றில் எய்யப்படும் இந்த அம்புகளுக்கு வலுவதிகம். அதிலும் சில விடலைகள் சி.டி.க்கள டிரைவரிடம் கொடுத்து போட சொல்லிவிட்டு ஹீரோ ரேஞ்சில் முன்சீட்டில் நண்பர்ளுடன் திரும்பி திரும்பி பார்த்தவாறு வருவது நமக்கு வேணடுமானால் காமெடியாக இருக்கலாம்.
இந்நிலை நமக்கு சில கேள்விகளை ஏற்படுத்துகிறது.
1. கல்வி முஃமின்களின் தொலைந்து போன செல்வம். சரிதான். ஆனால் தார்மீக ஒழுக்க நெறிகள் சிதைந்து போகக்கூடிய கேவலமான சூழலில் பெறப்படும் கல்வியை உண்மையிலேயே இஸ்லாம் அனுமதிக்குமா?
2. தம் பெண்களின் மேற்கல்வியை பற்றி கனவுகண்டு கல்லூரியில் சேர்த்த பெற்றோர்கள் தினமும் அல்லது மாதத்தில் சில நாட்களாவது தங்களது செல்வங்கள் படும் நடைமுறை வேதனைகள பார்த்திருப்பார்களா?
3. காபிர்கள் உல்லாசமாக சுற்றித்திரிவதாக குர்ஆன் குறிப்பிடும் நகரத்தினூடே போஸ்டர்களும், பாடல்களும், தாராளமயமாக்கத்தின் பல்வேறு வகையான கவர்ச்சி ஆயுதங்களுக்கு மத்தியில் தினமும் ஜாஹிலிய்யாவினூடாக (அறியாமை, அசத்தியம்) பயனித்து மீண்டு வரும் நமது சகோதரிகளுக்கு எந்த ஒரு மஷுரா அல்லது தஸ்கியா (ஒழுக்கபயிற்சி) வகுப்புக்கள் அல்லது சிறு பயான், ஆலிமாக்கள கொண்ட கலந்துரையாடல்கள யாருமே, எந்த அமைப்புக்களுமே நடத்துவதில்லையே?
4. அசத்தியத்தின் வாசலையெல்லாம் திறந்து வைத்துவிட்டு அவர்களை அதனூடே பாதுகாப்பில்லாமல் அனுப்பியும் விட்டு, நம் பெண்கள் சரியாக இருந்தால் எதுவும் தவறு நடக்காது என்று எதுகாலம் வரை சொல்லிக் கொண்டிருக்கப்போகிறோம்?
அனைத்தையும் விட மோசமான ஆபத்து ஒன்று நம்மாலேயே நெய்யப்படுகிறது.
எந்த ஆதாரமும் இல்லாமல் விட்டேற்றியாக ''ஆட்டம் போடுறாளுக,' கடலூர் போய் கூத்தடிக்கிறார்கள்'' என்று கற்பனையாக பேச்சு (அ)சுவைக்காக கிட்டதட்ட எல்லாருமே பேசுகிறோம். தீர்மானங்கள் கூட போடுகிறோம். நீங்கள் பார்த்தீர்களா? என்றால் இல்லை அப்படித்தான் பேசுகிறார்கள் என்கிறார்கள் மட்டமான அசட்டு சிரிப்புடன்..
இவர்களுக்கு உண்மையிலேயே சமுதாய ஆதங்கமா?
யாரை பற்றி பேசுகிறோம்?.
கண்ணியம் வழங்கப்பட்ட நம் சகோதரிகள பற்றி. நாகாக்க வேண்டாமா?
யார் பேசுகிறோம்? அவர்கள் வெளியிடங்கள் தேடி போகாதளவிற்கு ஊரிலேயே கல்லூரி போன்ற வசதிகள செய்து கொடுக்காமல், அவர்களின் நிலையை மாற்ற சிறிதும் யோசிக்காமல், மாற்றுவழிகள பற்றி விவாதித்து தீர்வு காண முயலாமல்.... அனைவரும் பேசுகிறோம்.
நிச்சயமாக நாங்கள் சிலர் கவனித்த வரை, அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால்... தவறு நடக்காதவரைதான் எதுவும் சரி. நிலைமை மாற எதுவும் சிந்திக்காத, செயல்படுத்த முனையாத எவருக்கும் தவறு ஒன்று நடந்தால் (அல்லாஹ் காப்பாற்றுவானாக) குறை சொல்ல நம் யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.
என்னதான் தீர்வு?
நமது அதிகாலைகள மதரஸாக்களில் அல்லாஹ்வினை பற்றிய அறிவுடன் துவங்கினோம். அந்த அமைப்பினை (செட்டப்) பல காரணங்களால் குலைத்ததில் துவங்குகிறது தீர்வுக்கான சிக்கல். இறையை பற்றிய அறிவான மெய்யறிவினை இழந்து எந்த கல்வி பெற்றாலும் நிச்சயமாக அது பெரும் நஷ்டத்திற்குரியதுதான். இஸ்லாமிய மார்க்க அறிவினை முழுமைபடுத்தும் கல்வியை வழங்குவதுதான் இதற்கு முழுமுதற் தீர்வு. தற்போதைய அவலத்திற்கு, உடனடியாக சமுதாய ஆர்வலர்கள் சிலர் அந்த மாணவிகளின் பெற்றோர்கள அழைத்து பேசவேண்டும்.
சில வருடம்முன்பு சகோதரர்கள் சிலர் சேர்ந்து இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திடம் இவ்விஷயத்தை பற்றி விவாதித்து தீர்வு ஒன்றும் காணப்பட்டது. அதாவது ஜமாஅத் சார்பாக வேன் ஒன்று வாங்கி பிள்ளகளுக்காக டிரிப் அடிப்பது என்றும் மாதம் செலவினங்கள பெற்றோர் மத்தியில் பகிர்ந்து கொள்வது என்றும். ஐமாஅத் தலைவர் மற்றும் மூத்த உறுப்பினர்களின் முன்முயற்சியில் உடனடியாக சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வசூலானது. ஆனால் உபயோகிக்கப்பட்ட மஹிந்திரா வேன் தற்போது சரியான, எதிர்பார்க்கும் விலையில் கிடைக்கவில்லை முதலிய காரணங்கள் கூறப்பட்டு அந்த திட்டம் கிட்டதட்ட சோக கிளமேக்ஸை அடைந்து வசூலிக்கப்பட்ட பணமும் அவரவர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. மீண்டும் முயற்சித்து வெற்றியடைபவர்களுக்கு ஒரு மெடிக்கல் சீட் இலவசம். அல்லது எதுஎதற்கோவெல்லாம் வெயிட் காட்டும் நமது அமைப்புக்கள் இதில் முன்நின்று வெற்றிகண்டு அல்லாஹ்விடம் நன்மை வெயிட் அடையலாம்.
என்.டி. பஸ் தவிர்த்து பார்த்தால் அதன் நேரத்திற்கு சரியாக 11.20க்கு ஒரு ஓ.டி. டவுன் வண்டி கிளம்புகிறது அதுவும் வாத்தியாபள்ளியிலிருந்து... அதை என்.டி. பஸ் கிட்டதட்ட சிப்காட் அருகேதான் கிராஸ் செய்கிறது. அதில் சென்றால் ஓ.டி.யில் இறங்கி வேறு பஸ் பிடித்து கல்லூரி செல்லலாம். செலவு கணக்கு பார்த்தாலும் கிட்டதட்ட அதேதான். மாணவிகள் அதை ஏன் தவிர்க்கிறார்கள் என்று அவர்களிடம் யாராவது கேட்டு சொல்லலாம்.
அல்லது
தவறு எதுவும் நடந்து விடாமல் பாதுகாக்க அல்லாஹ்விடம் சின்ஸியராக ஒவ்வொரு தொழுகைக்கு பின்னாவது துஆ செய்யலாம்.
அல்லது...
வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எதனாவது உளறாமல் இருக்கலாம்.
கல்வியின் அடையாளம் :
கல்விக்கான ஏக்கங்களுக்கு மத்தியில் கல்வி கற்கும் வசதி வாய்ப்பிருந்தும் மந்தமான சோம்பல் வாழ்க்கை தேர்ந்தெடுக்கும் சிலரும் உள்ளனர் என்பது வருத்தத்திற்க்குறியதே. இன்று படித்த பெண் என்பதற்கான அடையாளம், ஹிஜாப் அணிந்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம், யாருடன் வேண்டுமானாலும் போகலாம், என்பதாக பார்க்கப்படுகிறது.
உண்மையில் கல்விக்கு அடையாளம் என்பது அவர்கது நடத்தையில்தான் உள்ளது. கண்ணியமான பேச்சு, செயல்கள் மற்றும் தூய எண்ணங்களும்தான் ஒரு பெண் கல்வியறிவு பெற்றவள் என்பதற்க்கு சான்றாகும்.
படித்த பெண் என்பவள் சரியற்ற, வீணான, கண்ணிய குறைவான செயலிலிருந்து தன்னை காத்துக்கொள்வாள்.
இறைவன் வகுத்துத்தந்துள்ள இஸ்லாமிய வரம்புகளை பேணிக்காப்பாள். தான் கல்வி பெறும் காலம் என்பது தனக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட ஒரு சோதனைக்காலம் என்பதை எப்போதும் கவனத்தில் கொண்டிருப்பாள்.
அவளது குடும்பத்தின் மற்றும் சமூகத்தின் கண்ணியத்தின் அடையாளமாகத்தான் அவளது நடத்தை மற்றவர்களல் பார்க்கப்படுகிறது என்பதை அவள் பரிபூரணமாக உணர்ந்திருப்பாள்.
பிரயோகிக்கப்பட்ட சொற்கள் போன்று, தனது ஒழுக்க முரணான செயல்கள் திரும்ப மீட்டுத்தர இயலாத நல்ல / தீய விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை தனது அறிவில் கொண்டிருப்பாள்.
எல்லாவற்றிற்க்கும் மேலாக தன்னை படைத்த, தனக்கு இத்தனை கண்ணியம் வழங்கிய, தான் ஒருநாள் பதில் சொல்ல போகும் அதிபதியான ஒரே இறைவனை எந்நிலையிலும் நினைவில் கொண்டிருப்பாள். அவனது அன்பிற்கு தகுதிப்பெறத்தக்க பொருத்தமான செயல்களையே செய்வாள். அவனது கோபத்திற்க்கு பாத்திரமாகக்கூடிய எந்த செயலையும் எந்நிலையிலும் செய்யமாட்டாள். (இவை அனைத்தும் ஆண்களுக்கும் பொருந்தும்.)
அல்லாஹ் மிக அறிந்தவன்
Thursday, 6 March 2008
வளத்திற்கு ஆதாரம்
மனிதர்களாகிய நாம் வசிக்க வசதியாக இந்த பூமியை படைத்திருப்பதாக இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுகிறான். இறைவன் வழங்கிய இயற்கை அமைப்பை, காற்று, நிலம், நீர் போன்ற வளங்களை கன்னாபின்னாவென்று அசுர வேகத்தில் சிதைத்துபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
தொழிற்சாலைகள், வாகனங்கள், குளிர்சாதன பெட்டிகள் இவற்றினால் ஏற்படும் மாசு, காற்றில் கலந்து குளோபல் வார்மிங் எனப்படும் பூமி சூடேறும் நிகழ்வு ஏற்படுகிறது. பல கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருந்த லார்சன்பி போன்ற மிகப்பெரிய பனிகண்டங்கள் உருகி உடைகின்றன. உலகம் சமீபத்தில் எதிர்நோக்கும் மிகப்பெரும் சிக்கலாக குளோபல் வார்மிங் உள்ளது. பல தீவுகளும் கடலோர கிராமங்களும் ஏன், நம் பரங்கிப்பேட்டையும் தான் மூழ்கும் அபாயம்.
உலகிலேயே அதிகமாக காற்றை மாசுபடுத்தும் நாடு எது தெரியுமா? நம்ம பேட்டை தாதா, பிரபல பெண்கள், குழந்தைகள் கொலை ஸ்பெஷலிஸ்ட், அமெரிக்கா பெரியஅண்ணன்தான். நிலம். அணுகழிவுகள், தொழிற்சாலை ரசாயன கழிவுகள் முதல் நகர சூழல் ஏற்படுத்தும் கழிவுகள் வரை மனிதர்கள் செய்யும் அட்டூழியங்கள் எண்ணிலடங்கா மரங்க ளை அதிகமதிகம் வெட்டி சாய்ப்பதின் மூலம் மழைக்காடுகள் அழிதல், மழை குறைதல், நில அரிப்பு, கட்டுப்படுத்தமுடியாத வெள்ளங்கள் என்று இயற்க்கை திருப்பியடிப்பதை நாம் தாங்கவே முடிவதில்லை.
நீர் நிலைகளுக்கும் எந்த குறைச்சலும் இல்லாமல் அக்கிரமம் செய்கிறோம். கடல் மற்றும் ஆறுகளில் கலக்கும் ரசாயன கழிவுகளிலிருந்து குளங்களயும் வாய்க்கால்களயும் சத்தமில்லாமல் ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவது வரை!
சாதாரணமாக நமது தினசரி பயன்பாட்டில் எதிலும் சிக்கனம் என்பது இல்லாமலே போய்விட்டது. தாழ்ச்சாசோறு, பிரியாணி விருந்தாகட்டும், தண்ணீர் பயன்பாடாகட்டும் விரயம், விரயம் தான் இந்த வீண்விரய உபயோகத்திற்க்கெனவும் சேர்ந்து வகைதொகையில்லாமல் பூமியிலிருந்து உரியப்படும் தண்ணீரை விடுங்கள் கோக், பெப்ஸி போன்ற நிறுவனங்கள் நமது அரசுகளுடன் லிட்டருக்கு 00. 12 பைசா என்று ஒப்பந்தம் செய்து கொண்டு (சாதரணமக்களாகிய நமக்கு அரசு நிர்ணயிக்கும் விலை லிட்டருக்கு 1 ரூபாய் போல் இருக்கும்) நிலத்தை கிட்டத்தட்ட கற்பழிக்கின்றன என்றே சொல்லலாம். கேரளாவின் பிளாச்சிமடா போன்ற நீர்வளம்கொழித்த ஊர் மக்களுக்கு கோக் போன்ற ஏகாதிபத்திய கொள்ள கம்பெனிகளால் ஏற்பட்ட அவலம் நமக்கெல்லாம் நின்று எச்சரிக்கும் கிட்டத்து படிப்பினை.
சரி. ஆர்டிக் பனிக்கண்டம் உருகினால் எனக்கென்ன? அநியாய அமெரிக்கா அணுக்கழிவுகள எங்கே கொட்டினால் எனக்கென்ன என்றிருப்பவரா நீங்கள்? சரி வாருங்கள். நம் ஊர் அளவில் என்னவெல்லாம் செய்யலாம் என்று சிந்திக்கலாம். செயல்படுத்தவும் முனையலாம்.
அடுத்த பதிவை (குளங்கள்) பாருங்கள்.

Subscribe to:
Posts (Atom)