Thursday, 6 March 2008

வளத்திற்கு ஆதாரம்


மனிதர்களாகிய நாம் வசிக்க வசதியாக இந்த பூமியை படைத்திருப்பதாக இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுகிறான். இறைவன் வழங்கிய இயற்கை அமைப்பை, காற்று, நிலம், நீர் போன்ற வளங்களை கன்னாபின்னாவென்று அசுர வேகத்தில் சிதைத்துபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
தொழிற்சாலைகள், வாகனங்கள், குளிர்சாதன பெட்டிகள் இவற்றினால் ஏற்படும் மாசு, காற்றில் கலந்து குளோபல் வார்மிங் எனப்படும் பூமி சூடேறும் நிகழ்வு ஏற்படுகிறது. பல கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருந்த லார்சன்பி போன்ற மிகப்பெரிய பனிகண்டங்கள் உருகி உடைகின்றன. உலகம் சமீபத்தில் எதிர்நோக்கும் மிகப்பெரும் சிக்கலாக குளோபல் வார்மிங் உள்ளது. பல தீவுகளும் கடலோர கிராமங்களும் ஏன், நம் பரங்கிப்பேட்டையும் தான் மூழ்கும் அபாயம்.

உலகிலேயே அதிகமாக காற்றை மாசுபடுத்தும் நாடு எது தெரியுமா? நம்ம பேட்டை தாதா, பிரபல பெண்கள், குழந்தைகள் கொலை ஸ்பெஷலிஸ்ட், அமெரிக்கா பெரியஅண்ணன்தான். நிலம். அணுகழிவுகள், தொழிற்சாலை ரசாயன கழிவுகள் முதல் நகர சூழல் ஏற்படுத்தும் கழிவுகள் வரை மனிதர்கள் செய்யும் அட்டூழியங்கள் எண்ணிலடங்கா மரங்க ளை அதிகமதிகம் வெட்டி சாய்ப்பதின் மூலம் மழைக்காடுகள் அழிதல், மழை குறைதல், நில அரிப்பு, கட்டுப்படுத்தமுடியாத வெள்ளங்கள் என்று இயற்க்கை திருப்பியடிப்பதை நாம் தாங்கவே முடிவதில்லை.

நீர் நிலைகளுக்கும் எந்த குறைச்சலும் இல்லாமல் அக்கிரமம் செய்கிறோம். கடல் மற்றும் ஆறுகளில் கலக்கும் ரசாயன கழிவுகளிலிருந்து குளங்களயும் வாய்க்கால்களயும் சத்தமில்லாமல் ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவது வரை!

சாதாரணமாக நமது தினசரி பயன்பாட்டில் எதிலும் சிக்கனம் என்பது இல்லாமலே போய்விட்டது. தாழ்ச்சாசோறு, பிரியாணி விருந்தாகட்டும், தண்ணீர் பயன்பாடாகட்டும் விரயம், விரயம் தான் இந்த வீண்விரய உபயோகத்திற்க்கெனவும் சேர்ந்து வகைதொகையில்லாமல் பூமியிலிருந்து உரியப்படும் தண்ணீரை விடுங்கள் கோக், பெப்ஸி போன்ற நிறுவனங்கள் நமது அரசுகளுடன் லிட்டருக்கு 00. 12 பைசா என்று ஒப்பந்தம் செய்து கொண்டு (சாதரணமக்களாகிய நமக்கு அரசு நிர்ணயிக்கும் விலை லிட்டருக்கு 1 ரூபாய் போல் இருக்கும்) நிலத்தை கிட்டத்தட்ட கற்பழிக்கின்றன என்றே சொல்லலாம். கேரளாவின் பிளாச்சிமடா போன்ற நீர்வளம்கொழித்த ஊர் மக்களுக்கு கோக் போன்ற ஏகாதிபத்திய கொள்ள கம்பெனிகளால் ஏற்பட்ட அவலம் நமக்கெல்லாம் நின்று எச்சரிக்கும் கிட்டத்து படிப்பினை.

சரி. ஆர்டிக் பனிக்கண்டம் உருகினால் எனக்கென்ன? அநியாய அமெரிக்கா அணுக்கழிவுகள எங்கே கொட்டினால் எனக்கென்ன என்றிருப்பவரா நீங்கள்? சரி வாருங்கள். நம் ஊர் அளவில் என்னவெல்லாம் செய்யலாம் என்று சிந்திக்கலாம். செயல்படுத்தவும் முனையலாம்.
அடுத்த பதிவை (குளங்கள்) பாருங்கள்.

No comments: