காயல்பட்டினம் சென்றிருந்தேன்.
என் நெடுநாள் கனவு.
பரங்கிப்பேட்டைக்கும் காயலுக்குமான தொடர்பை செவி வழியாக மட்டுமே அறிந்து இருந்த எனக்கு இது ஒரு எதிர்பார்ப்பு பயணம்.
ஒரு நாள் பயணம்.
காயல் என்னை அவ்வளவாக ஏமாற்றவில்லை. ஆனால் பெரிதாக ஈர்த்துவிடவுமில்லை.
சில இடங்களில் 20 வருடத்திற்கு முந்தைய பரங்கிப்பேட்டை தெரிகிறது. சில விஷயங்களில் லேட்டஸ்ட்.
தர்கா உள்ளிட்ட விஷயங்களில் ரொம்ப பின்னாடியும்,
தெருவுக்கு தெரு மதரஸா, இஸ்லாமிய கல்விக்கூடங்களில் பரங்கிப்பேட்டை தொடமுடியா உயரத்திலும் இருக்கிறது.
அழகான வீடுகள், வீடுகளின் கட்டமைப்பு நேர்த்தியான but நெருக்கடியான ஒரு அமைவில் உள்ளது. (எனக்கெல்லாம் நாலு நாள் கூட தாங்காது ) ஆனால், தெருக்களுக்கு வராமலேயே மொத்த ஊரையும் முடுக்கின் மூலம் கடக்கும் பெண்களுக்கான பிரத்தியேக முறை அற்புதமானது. பிரமிக்க வைக்கிறது.
ஆனால் இப்போது 'எல்லோரும் எங்கேயும்' நிலை வந்துவிட்டது என்கிறார்கள்.
கிட்டத்தட்ட 60,000 மக்கள் தொகை, 60 சொச்ச பள்ளிவாசல்கள், 20 முஸ்லிம் பள்ளிக்கூடங்கள், முஹல்லாதோறும் ஜமாஅத்கள், ஒன்றுபட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், ஏராளமான தரீக்கா மற்றும் கொள்கை பிரிவுகள்...
... டிப்பிக்கல் முஸ்லீம் ஊர்.
முன்பு வைரம் மற்றும் கற்கள் வணிகம். தற்போது....
யெஸ்..
வெளிநாட்டு சம்பாத்தியம்.
பக்கத்திலுள்ள கீழக்கரையை பணக்கார ஊர் என்கிறார்கள்.
பரங்கிப்பேட்டையை பற்றி அதிகமானோர் தெரிந்திருக்கவில்லை.
ஊரைப்பற்றி அதன் பாரம்பரியம் பற்றியும் ஒரே ஒரு புத்தகம்தான் கிடைத்தது. (இதிலேயும் ஒற்றுமை!)
நான் சந்தித்த பல ஆளுமைகள் தங்களை அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் வழிவந்தவர்களாக சொல்லிக் கொள்கின்றனர். சிலர் நபி(ஸல்) அவர்கள் வழிவாராகவும், சிலர் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வழிவார் என்றும்.
பெண்கள் அதே நாணம், கண்ணியம்.

மிகச்சில கடலோர முஸ்லிம் கிராமங்களின் அடையாளமான வெள்ளை துப்பட்டி ஒன்று கூட பார்க்கமுடியவில்லை. . நிறைய புர்காக்கள்தான்.
தெருக்களின் பெயர்களில் ஒன்றில் (மட்டுமே) மரைக்காயர் என்று பார்க்க முடிந்தது... துப்பட்டி போன்று மரைக்காயரும் வழக்கொழிந்து போயுள்ளது. ஆனால் பற்பல குடும்ப பெயர்கள் புழக்கத்தில் உள்ளன.
காயல்பட்டினத்தின் ஊர் கட்டுப்பாடு காலம் காலமாக நமக்கு தெரிந்ததுதான். முஸ்லிம் குடியிருப்புக்களில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கிறார்கள்.

போலீஸ் ஸ்டேஷன் கிடையாது
வடகாயல், பழைய காயல் என்று இரண்டு உள்ளது.

வரலாற்றில் கபாடபுரம் என்றும் அலைவாய் துறைமுகம் என்றும் காயல் என்றும் பற்பல இடங்களில் குறிப்பிடப்படுவது இன்றைய காயல்தான் என்கிறார்கள்.
ஊரின் சூழ உள்ள தொழிற்சாலைகளால் சுற்றுப்புற சூழலியல் சிக்கல்களை அனுபவிக்கும் விஷயத்தில் இவர்கள் நமக்கெல்லாம் முன்னோர்கள்.
ரெயில் நிலையம் நமதூரைப் போன்றே ஊரிலிருந்து 4 கிமீ தள்ளி இருப்பது
பயணிகள் நடைமேடை உயரம் குறைவு
ஒரேயொரு தண்டவாளம் போன்றவை புன்னகைக்க வைக்கும் ஒற்றுமைகள்
attn : சகோதரர் கலீல் அஹமது பாகவி அவர்கள் .
வேன் பிடித்து போகத் தேவையில்லாத அழகான கடற்கரை. அயலார் எவரின் தொல்லைகளுமின்றி குடும்பம் குடும்பமாக பொழுது கழிக்க வருகின்றனர். பார்க்கவே நிறைவாக இருந்தது. ரமலான் மாத இரவுகளில் இன்னும் ஜெதபாக இருக்கும் என்கிறார்கள், .
ஒரு நாள் பயணம் என்பதால் காயல்பட்டினம் பிரியாணி, தால்ச்சா பற்றி தெரியவில்லை. தம்மடை என்று ஒரு பனியாரம் (முட்டை பனியான் போல் உள்ளது) மட்டும் டேஸ்ட் பண்ணிபார்த்தோம்.
90s kids களுக்கு : பாக்கு முட்டாய், மிண்ட் முட்டாய், சக்கர முட்டாய் எல்லாம் கிடைக்கிறது.
காயல்பட்டினம் தான் காயல் என்ற ஒரு புத்தகம் பரிசளித்தார் டாக்டர் ஆர்.எஸ். அப்துல் லத்தீப் அவர்கள்.
எங்களுக்காக தம் பணியினையும் பாராமல் உடனிருந்த ஹாபிஸ் ரஹமதுல்லாஹ் உஸ்தாத் அவர்களின் தொடர்பில் 'தாவா சென்டர்' ஜக்கரியா நானா, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் அபுல் ஹசன் கலாமி (எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்) எழுத்தாளர் சாலை பஷீர் போன்றோரை சந்திக்க முடிந்தது. அபுல் பரக்காத் அவர்களை சந்திக்க இயலவில்லை.
எங்களுக்கு சிறப்பான காலை உணவை (பரோட்டா, இட்லி, பூரி, மட்டன், ஈரல், ... கலக்கல் டிபன்! ) அளித்த ரஹமத்துல்லாஹ் உஸ்தாத், அவர்தம் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் அற்புதமான மதிய உணவு (அப்படியே பரங்கிப்பேட்டை கறி சுவை) அளித்த பரங்கிப்பேட்டை சகோதரரின் ஹாபீழா மனைவியின் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் மென்மேலும் பரக்கத்தினையும் அருளையும் பொழிவானாக.
இதுபோல் இன்னும் ஒரு நாலு பக்கம்கூட எழுதலாம். படிக்க ஆள் வேண்டுமே !!
முடிவாக,
என் நெடுநாள் சந்தேகம்.
காயல்பட்டினத்திலிருந்துதான் பரங்கிப்பேட்டைக்கு வந்து குடியேறினார்கள் என்று சொல்லப்படுவது குறித்து கிட்டத்தட்ட நான் சந்தித்த அனைத்து ஆளுமைகளிடமும் கேட்டேன்..
புத்தகம் எழுதிய பெரியவர் அப்துல் லத்தீப் அவர்கள் சொன்னது..
"சிம்பிள்! உக்காஷா (ரலி) அவர்கள் உங்கள் ஊருக்கு வந்துள்ளார் அல்லவா? அப்போ உங்கள் ஊரில் முஸ்லிம்கள் வருகை கி.பி.640 கணக்கில் வருகிறது. நீங்கள் ஏன் எங்கிருந்தும் வரவேண்டும்?"
இது போன்ற 'காலம்'கள் '' நம்மை நாம் '' அறிந்துக்கொள்ள உதவும் என்று அடிப்படையில் எழுதப்படுகிறது.
குறைந்த நேர பயணம் (10 மணி நேரம்) என்பதால் எனது அவதானிப்புக்கள் மற்றும் கணிப்புக்களில் தவறு இருக்கலாம்.

அறிந்தவர்கள் திருத்துங்கள்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
அன்புடன்
ஹமீது மரைக்காயர்
மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை.
அன்புடன்
ஹமீது மரைக்காயர்
மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை.
No comments:
Post a Comment