சென்னை புத்தக கண்காட்சி சென்றிருந்தேன்.
நியாயப்படி பார்த்தால் ஐஸ்கிரீமும், சேண்டவிச்சும் சென்ற தடவையை விட கொஞ்சம் சுமார் என்றுதான் எழுத துவங்க வேண்டும். உண்மை என்பது எல்லா தடவையும் அங்கு விற்ற பாயசம் மற்றும் கம்பங்கூழும் போல சுவையாக இருக்காது என்பதால் இம்முறை புத்தகங்களை பற்றி எழுதி துவங்குவோம்.
சென்ற முறையை எனது அஜெண்டா - வரலாறு
இந்த முறை சிறுவர் சிறுமியர் சுற்றி இருந்தது.
தமிழ் கூறும் வாசிப்பு நல்லுலகில் அவர்களுக்கான இடம் என்பது அப்போது போலவே இப்போதும் ஒரு பெரும் வெற்றிடமாக உள்ளது. குறிப்பாக இஸ்லாமிய சிறுகதைகள் அதிலும் குறிப்பாக படக்கதைகள். எனது குழந்தைகள் லயன் / முத்து காமிக்சின் டெக்ஸ் வில்லரையும், லக்கி லூக்கையும், கிட ஆர்டினையும் பிடித்து தொங்குவதை பார்த்தல் அந்த வருத்தம் இன்னும் பெரிதாகும். ஆங்கிலத்தில் Goodwords பதிப்பகம் இதில் ஒரு ஆறுதல்
இந்த முறை ஒரு அழகிய மற்றம்
IFT பதிப்பகம் இரண்டு புத்தகங்களையும் ( கதிஜா(ரலி), பாத்திமா(ரலி) ) ரஹ்மத் பதிப்பகம் இரண்டு புத்தகங்களையும் ( மூஸா (அலை) ... ) ) அழகிய வடிவமைப்பில் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் தரத்தில் வெளியிட்டு இருந்தன.
எனக்கொரு பேராசை ...
ஸஹாபாக்கள் முதல் தற்கால முஜத்திதுகள் வரை இஸ்லாமிய ஆளுமைகள் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக எளிய ( 40 பக்க அளவில் ) நூல்.
ஒரே series தொடராக வெளியிடுவது.
100 ஆளுமைகள்.
100 புத்தகங்கள்.
படிக்கக்கூடிய எளிய ஃபாண்ட்,
எளிய வடிவமைப்பு.
முற்றிலும் சிறுவர் சிறுமியருக்கானது.
விலை ரூ.10. இன்னும் நூறு வருடமானாலும் அதே பத்து ரூபாய.
நன்றாக யோசித்துப் பார்த்தால் இன்றைய நிலையில் முஸ்லிம் இளையதலைமுறையினரிடையே வாசிப்பு பரவலாகவும், இஸ்லாம் அழகிய முறையில் உட்புகுந்து நிலைக்கவும் நாம் செய்ய வேண்டிய மிக சிறிய கிரவுண்ட் வொர்க் இது மாதிரிதான் இருக்க வேண்டும்
No comments:
Post a Comment